கொரோனா மூன்றாம் அலையை எதிர் கொள்ள நாங்கள் ரெடியாக இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்குக்கு பிறகு பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் மக்கள் சற்று நிம்மதியுடன் உள்ளனர். இந்நிலையில் டெல்லியில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 420 டன் ஆக்சிஜன் திறன் கொண்ட சேமிப்பு நிலையம் டெல்லியில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் 150 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இந்திரப்பிரஸ்தா கேஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மருந்துகள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், ஆராயவும் மருத்துவ குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்த முறை நாங்கள் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.