விருதுநகர் மாவட்டத்தில் கடைக்கு சென்ற மூதாட்டியிடம் மர்ம நபர் ஒருவர் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள திருமுக்குல தெருவில் சகுந்தலா(67) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பால் வாங்குவதற்க்காக கடைக்கு செய்துள்ளார். இதனையடுத்து பொருட்களை வாங்கிய சகுந்தலா வாழைக்குழ தெரு வழியாக வீட்டுக்கு நடந்து வந்துள்ளார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் சகுந்தலா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சகுந்தலா உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் இன்ஸ்பெக்டர் வினோதாவிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.