துலாம் ராசி அன்பர்களே…!!! இன்று எவருக்கும் தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை இருக்கும். சேமிப்பு பணம் செலவிற்கு பயன்படும். மனைவியின் ஆறுதல் நம்பிக்கையை கொடுக்கும். பணியாளர் பாதுகாப்பில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள்.
அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகளும் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். ஆதாயம் சிறப்பாகவே கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் கலகலப்பு சந்தோசமும் நிலைத்து இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். இருந்தாலும் படித்த பாடத்தை மட்டும் எழுதிப் பாருங்கள். நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்