மாஸ்டர் படத்தில் எடிட்டராக பணிபுரிந்த பிலோமினா ராஜு க்கு திருமணம் நடந்தது. இதில் நேரில் சென்ற லோகேஷ் கனகராஜ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகன் பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகி வெற்றிப்படமாக அமைந்த படம் மாஸ்டர். கொரோனா காரணமாக எட்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாததால் மக்கள் தியேட்டருக்கு வருவதற்கு ஆர்வம் காட்டவில்லை.
இதனை மாஸ்டர் திரைப்படம் மாற்றி அமைத்தது. 100% இருக்கைகளில் அனுமதி வழங்கிய தமிழக அரசு பின்னர் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி 50% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியது. மாஸ்டர் படம் நல்ல வசூலை பெற்று இருப்பதாக திரையுலகினர் கொண்டாடினர். இப்படத்தில் அனைவரும் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும், கதை, எடிட்டிங் உள்ளிட்ட பல காரணங்களால் மாஸ்டர் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் எடிட்டர் பிலோமின் ராஜூக்கு, திவ்ய பிரதீபாவுடன் திருமணம் நடைபெற்றது. இதில் நேரில் சென்ற லோகேஷ் கனகராஜ் மணமக்களை வாழ்த்தியுள்ளார்.