ரிஷபம் ராசி அன்பர்களே…!!இன்று நீண்ட நாள் தவம் இனிதே நிறைவேறும். உறவினர் நண்பர்கள் பெருமையுடன் வாழ்த்துவார்கள். தொழில் வியாபாரம் செழிக்க அதிக அளவில் பணிபுரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகுலம் ஏற்படும்.
இன்று டென்ஷனை குறைப்பது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் உங்களது வேலைகளை சரிவர செய்வது வெற்றிக்கு உதவும். எதிலும் நிதானத்தை கடைபிடியுங்கள் அது போதும் இன்று அக்கம் பக்கத்தினரிடம் எந்தவித வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது ரொம்ப நல்லதாக இருக்கும் .இன்று பணப்பரிவர்த்தனையில் ரொம்ப கவனமாகவே ஈடுபடுங்கள் கூடுமானவரை கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்வது ரொம்ப நல்லது.
இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் கொஞ்சம் கடுமையாக உழைத்து படங்களை படியுங்கள். எப்போதும் போலவே படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.அது உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான…
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்டமான நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு