விருச்சிக ராசி அன்பர்களே…!! இன்று பிள்ளைகளால் பெருமை சேரும் நாளாக இருக்கும். முன்னோர் வழி சொத்துக்கள் கிடைப்பதில் இருந்த தாமதம் விலகும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். எதிர்ப்புகள் விலகி செல்லும். கொடுத்த வாக்கை காப்பாற்றி முடிப்பீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் இருக்கும். வரவு இருந்தபோதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் செலவு கொஞ்சம் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடனிருப்பது நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். வெளியூர் பயணம் அலைச்சலைக் கொடுத்தாலும் நல்ல அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும். கணவன் மனைவியைப் பொறுத்தவரை சிறப்பான முன்னேற்றம் இருக்கும், அன்பு இருக்கும். அதுபோலவே உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு, தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்