விருச்சிக ராசி அன்பர்களே…!! இன்று மனதில் இனம்புரியாத சங்கடம் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர் அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஓரளவு கூடும். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாறுதல்கள் செய்வீர்கள். இன்று வேலை செய்யும் இடத்தில் மனவருத்தம் ஏற்படும் படியாக சூழ்நிலை உருவாகலாம். எச்சரிக்கையாக இருங்கள்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளரிடம், நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மையைக் கொடுக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் அணுகுமுறையோடு அணுகுங்கள். இன்று மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் ஆர்வம் செல்லும். கூடுமானவரை கல்வியில் நீங்கள் ஆர்வத்தை மேற்கொள்ளுங்கள்.
படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள் சிறப்பாக இருக்கும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்