Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு…”நம்பிக்கைக்கு உரியவரை சந்திப்பீர்”… சிரமம் எடுத்து உழைக்க வேண்டும்..!!

கன்னி ராசி அன்பர்களே..!!!  இன்று உங்களின் எதார்த்தப் பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச் செல்லும். இன்று சொத்தின் பேரில் கடன் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நம்பிக்கை உரியவரை நீங்கள் இன்று சந்திக்க நேரிடும். இன்று எதிலும் அதிகம் சிரமம் எடுத்து கொஞ்சம் உழைக்க வேண்டியிருக்கும். மனம் அமைதியாகவே காணப்படும். காலம் தவறாத பேச்சினால் அனைவரிடமும் நீங்கள் நல்ல பெயர் எடுப்பீர்கள், சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். அது மட்டுமில்லாமல் சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். மற்றவர்கள் மீது அன்பாக இருப்பீர்கள். இன்று அதனால் மகிழ்ச்சி உங்களுக்கு ஏற்படும்.

தெய்வீக சிந்தனை மேலோங்கும். தெய்வத்திற்கு சிறு தொகையை நீங்கள் செலவிட நேரிடும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாகவே அமையும். இன்று திருமண முயற்சிகளை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். உங்களுடைய உடலில் வசீகரத் தன்மை கூடுவதால் காதலில் வயப்படக்கூடிய சூழல் இன்று இருக்கு.

இன்று மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். கல்வியில் இருந்த தடை விலகிச்செல்லும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |