கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று உங்கள் பணத்தேவை பூர்த்தியாகும் நாளாக இருக்கும். தொலைபேசி வழியில் அனுகூல செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சி பெறுவதற்கு அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளை கேட்பீர்கள். சுப செலவுகள் கொஞ்சம் உண்டாகும். இன்று பணவரவு தாராளமாகவே இருக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகி செல்லும்.
பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும், அந்த நட்பின் மூலம் லாபமும் உண்டாகும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும், சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். இன்று எல்லா வகையிலுமே உங்களுக்கு நன்மை ஏற்படும். இன்றைய நாள் உங்களுக்கு செல்வச் செழிப்புமிக்க நாளாகவும் இருக்கும். இன்று மாணவர்கள் மட்டும் கல்வியில் விளையாட்டை ஓரம் கட்டிவிட்டு, பாடங்களை படிப்பது சிறப்பு.
கொஞ்சம் கூடுதலாக பாடங்களை மட்டும் கவனியுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.