இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை போல் பல நாடுகளிலும் உருமாறிய தொற்று பரவி வந்தது. பிரேசில், இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா உருமாறி தாக்கியது. எந்த நாட்டில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதோ அந்த நாட்டின் பெயருடன் அந்த வைரஸ் அழைக்கப்பட்டது. அதாவது பிரேசிலில் உருமாறிய வைரஸ், தென் ஆப்பிரிக்கா உருமாறிய வைரஸ், இந்தியாவில் உருமாறிய வைரஸ் என்று அழைக்கப்பட்டது. இப்படி நாட்டை அடையாளப்படுத்தி அழைப்பதை மத்திய அரசு கடுமையாக கண்டித்தது.
மேலும் இத்தகைய பதிவுகளை நீக்கும்படி சமூக வலைதள நிறுவனங்களை கேட்டுக்கொண்டிருந்தது. அதற்கு பதிலாக அறிவியல் குறியீடு பெயர்களைக் கொண்டு தற்போது வைரஸ்கள் அழைக்கப்பட்டு வருகின்றன. அதாவது ஆல்பா, பீட்டா, டெல்டா என்று உருமாறிய வைரசுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உருமாறிய கொரோனா வைரசுக்கு தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டாவின் பெயரை சூட்டுவதா? என உலக சுகாதார அமைப்புக்கு மக்கள் நீதி மையம் கட்சி தொழிலாளர் நல மணி கண்டனம் தெரிவித்துள்ளது.