கும்ப ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் அதிகம் பேசுவதை தவிர்ப்பதால், சுய கௌரவத்தை பாதுகாக்க கூடும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுக்கான பணவரவு கிடைக்கும். புத்திரரை வழி நடத்துவதில் இதமான அணுகுமுறை வேண்டும். அவர்களிடம் கோபப்பட வேண்டாம். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு திருப்தியை கொடுக்கும், ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பதுதான் ரொம்ப கஷ்டம். மேலிடத்தின் கனிவான பார்வையால் புகழும் பெறுவீர்கள்.
குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ஓரளவு முன்னேற்றத்தை கொடுக்கும். இருந்தாலும் யாரிடமும் இன்று கடன்கள் மட்டும் வாங்காதீர்கள். அந்த வேலையை இன்று தவிர்த்து விடுங்கள் அது போதும். அது போலவே புதிய முயற்சிகள் கூட இன்று வேண்டாம். பொறுமையாக இருங்கள், மனதில் தெய்வத்தை நினைத்துக் கொண்டு தியானம் செய்யுங்கள் அது போதும்.
இன்று மாணவர்கள் கொஞ்சம் கவனமாக உழையுங்கள், அப்பொழுதுதான் படித்த பாடம் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக அமையும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.