Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு…”தெய்வ அனுகூலம்”…. அளவான மூலதனம் போதும்…!!

கடக ராசி அன்பர்களே…!! இன்று பொது இடங்களில் நிதானத்துடன் பேசவேண்டும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். பொது பந்தயத்தில் ஈடுபடவேண்டாம். சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்க உதவும். வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். இன்று ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்கு உண்டான பாதைகளை நீங்கள் வகுப்பீர்கள்.

அதேவேளையில் தெய்வ அனுகூலமும் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். காரியத்தில் அனுகூலம் ஏற்படும். செய்யும் முயற்சியில் தடைகள் வந்தாலும் அதை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே அன்பு கூடும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கு. முயற்சியின் பேரில் சில முக்கியமான பணியை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி, செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |