Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு…”கஷ்ட காலகட்டத்தில் நண்பர்கள் உதவி”…. அளவான பண வரவு…!!!

கடக ராசி அன்பர்களே…!!  இன்று முக்கியமான செயல் நிறைவேற நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.  கஷ்ட காலகட்டத்தில் நண்பர்கள் உங்களுக்கு உதவிகளை செய்வார்கள். உங்களின் கஷ்ட சூழ்நிலையை மட்டும் பிறரிடம் சொல்லாமல் இருங்கள் அது போதும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். அளவான பண வரவுதான் இன்று கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் வர தாமதம் ஆகலாம்.இன்று மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது, வீண் பிரச்சனை வராமல் தடுக்கும்.

அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சிறப்பாக நிறைவேறும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கூடுமானவரை மற்றவர்கள் பேசுவதை உற்று கவனித்து அதற்கு ஏற்றார்போல் பதில் கூறுங்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். அதாவது ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சக மாணவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |