Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு…”பணவரவு திருப்தி”…. வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்….!!!

கும்ப ராசி அன்பர்களே…!!  இன்று மனதில் இனம்புரியாத கவலை உருவாகலாம். வாழ்வியல் சிரமம் சரி செய்ய நண்பரின் உதவி கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெற அதிக பணிபுரிவீர்கள். பணவரவு திருப்திகரமான அளவில் இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். இன்று வீண் குற்றச்சாட்டுக்கு ஆளாக கூடும், கவனமாக இருங்கள். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சிரமங்கள் ஏற்படலாம்.

அதற்கு இடம் கொடுக்காமல் நடந்துகொள்வது நன்மையை கொடுக்கும். கூடுமானவரை பொறுமையுடனும், நிதானத்துடனும் நடந்து கொள்ளுங்கள். வாக்குவாதத்தில் தயவுசெய்து ஈடுபட வேண்டாம். அதுமட்டுமில்லாமல் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். நீங்கள் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கடன்களும் வாங்க வேண்டாம். அதேபோல் புதிய முயற்சிகள் ஏதாவது செய்வதாக இருந்தால் கொஞ்சம் பொறுமையாகவே செய்யுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித பிரச்சினையும் இல்லை.

சரியான முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் படித்த பாடத்தை கொஞ்சம் எழுதிப் பாருங்கள். நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |