கடக ராசி அன்பர்களே..!!! இன்று நீங்கள் மனசாட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும்.நண்பர்கள் முன்பு கேட்ட உதவியை செய்வீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டியிருக்கும். மேலிடத்திலிருந்து பாராட்டுகள் குவியும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் வெற்றிகரமாக இருக்கும்.
அது மட்டுமில்லாமல் வெளியூர் பயணத்தின் போது உடைமைகள் மீது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மிக முக்கியமாக தாய் தந்தையரின் உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் வேண்டும். அது மட்டுமில்லாமல் இன்று மற்றவர்களிடம் எந்தவித வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம். பொறுமையை கையாளுங்கள். பண விஷயத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னசின்ன பொசல்கள் இருக்கும். பேச்சுவார்த்தை என்பது ரொம்ப கவனமாக பேசுங்கள்.
வீண் வாக்குவாதங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கவனமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை கவனமாக எழுதிப்பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமும் உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும்.