கடக ராசி அன்பர்களே….!!! இன்று பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி கூடும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை கொஞ்சம் சந்திக்க நேரிடும். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. விவேகமாக செயல்படுவது வெற்றியை கொடுக்கும்.
எதிர்பார்த்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கொஞ்சம் கவனமாக இருங்கள். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள், பொறுமையாக நிதானமாக செய்யுங்கள். இன்று உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை, நல்லபடியாக இருக்கும். ஆனால் சரியான உணவு வகைகளை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். அது போலவே கணவன் மனைவிக்கிடையே பூசல்கள் இருக்கும். எதையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித பிரச்சனையும் இல்லை. சரியான முன்னேற்றம் இருக்கும். அதுபோலவே ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால், ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : வடக்கு