கடக ராசி அன்பர்களே…!!! இன்று விரயங்களை சமாளிக்கக் கூடிய சூழல் இருக்கு. வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர் நண்பர்களை சந்திக்க நேரிடும். வாகன பராமரிப்புச் செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும். இழுபறியாக இருந்த காரியங்களும் சிறப்பாக நடந்து முடியும். கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும். விரும்பிய பதவியும் கிடைக்கும். இன்று வழக்கு விவகாரங்களுக்குள் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை காணப்படும்.
கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். இன்று மாணவ கண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூடுமானவரை கொஞ்சம் பொறுமையை கையாளுங்கள், அது போதும். விளையாட்டு துறையில் ஆர்வம் அதிகரிக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுபோலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : தெற்கு