சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக தான் இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாளாகவே இன்று இருக்கும். இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.
மாணவர்கள் கவனத்தைச் சிதறவிடாமல், மிகவும் நன்கு கவனித்து பாடங்களைப் படிப்பது சிறப்பு. சகமாணவர்கள் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். இன்று கணவன்-மனைவிக்கு இடையே கொஞ்சம் இடைவெளி இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். போதுமான வரை கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். தெய்வீக நம்பிக்கை உங்களை சிறப்பானதாக ஆக்கி கொடுக்கும்.
அதுமட்டுமில்லாமல் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.