தேனி மாவட்டத்தில் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த பெண் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு தங்க சங்கிலியை பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள வைகைபுதூர் கிராமத்தில் மாயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பசுபதி(55). இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் அவரது தோட்டத்தில் புல் அறுத்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த மர்மநபர்கள் பசுபதி மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு அவர் கழுத்தில் இருந்த 10 சவரன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பசுபதி அலறிய சத்தம் கேட்டு ஓடி வந்த மாயன் மற்றும் அக்கம்பக்கத்தினர் தப்பிக்க முயன்ற இருவரையும் பிடித்துள்ளனர். மேலும் அவர்களை வைகைபுதூர் காவல்நிலையத்தில் அழைத்து சென்றுள்ளனர். அங்கு நடத்திய விசாரணையில் அவர்கள் சாத்துப்பட்டியை சேர்ந்த செல்வம்(38), மற்றும் வடுகப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர்களை கைது செய்த போலீசார் தங்க சங்கிலியையும் மீட்டுள்ளனர்.