Categories
தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசத்துக்கு 3 டேங்கர்களில் ஆக்சிஜன் இறக்குமதி…. தகவல்…!!

 உத்தரப் பிரதேசத்துக்கு இன்று காலை மூன்று கேரக்டர்களில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு அனுப்பியுள்ளனர். இரண்டாவது ஆக்சிஜன் விரைவில் அனுப்பப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. நாளுக்கு நாள் தொற்று பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறுவதற்கு ஆளாகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு மிக முக்கிய ஒன்றாக  ஆக்சிஜன் விளங்குகிறது. ஆனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ஒரு சில மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழப்பிற்க்கு  தள்ளப்பட்டுள்ளனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டியினை குறைப்பதற்கு  மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ரயில்வே துறை தொடங்கியுள்ளது. இதன் மூலம் தீவிர மருத்துவ ஆக்சிஜன் சிகிச்சை மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள போகோவில் இருந்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் உத்திரப் பிரதேச மாநிலத்துக்கு இன்று காலை சென்றடைந்தது. இதில் 3 டேங்கர்களில் திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டு அனுப்பியுள்ளனர்.

இந்த ரயிலில் இருந்து வந்த திரவ ஆக்சிஜன்  2 லாரிகளில் லக்னோவிற்கும் , ஒரு லாரியில் வாரநாசினிகும் அனுப்பப்பட்டுள்ளது.ஒரு லாரியில் ஏற்றப்படும் ஆக்சிஜனின் மதிப்பு 15 ஆயிரம் லிட்டர் நிரப்பக் கூடிய தாகும். லாரியில் ஏற்றி அனுப்பப்பட்ட ஆக்சிஜன்கள் லக்னோவில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையை பாதி சரி செய்துள்ளது. இதனால் தலைநகரமான லக்னோ நல்ல நிலைமையில் உள்ளது என்று கூடுதல் தலைமைச் செயலாளர் அவினிஸ்குமார் அஸ்வதி தெரிவித்துள்ளார். உத்திரப் பிரதேசத்திற்கும் இரண்டாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் விரைவில் அனுப்பப்படும் என்று ரயில்வே துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |