ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க கோரிய வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு 913 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளிலும் இருக்கிறது. அதே போல கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கிறது. இதனை முறையாக நிர்வகிக்க வேண்டும். அதற்கான நபர்களை நியமிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அதிமுகவினர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் ரத்த உறவுகளும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று தீபா மற்றும் தீபக் ஆகியோரை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
அதனையடுத்து ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க தயாராக இருப்பதாகவும், வருமான வரித்துறைக்கு 40 கோடிக்கு மேல் பாக்கி இருப்பதாகவும், அந்த பாக்கியை செலுத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து இருந்தார்கள். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தீபக் மற்றும் தீபா நேரில் ஆஜராக நீதிபதி தெரிவித்தார் .அவர்களது அப்போது மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்த ஜெயலலிதாவின் சொத்தை எப்படி தனிநபர் கையில் ஒப்படைக்க முடியும்.
அதற்காக அறக்கட்டளை உருவாக்கலாம், மக்களுக்கான நலத்திட்டங்களை செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்ததற்கு, தாங்கள் தயாராக இருப்பதாகவும் சொத்துகளை தீபா, தீபக் கூறியதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் ஒத்தி வைத்துள்ளனர். இந்த வழக்கில் தீர்ப்பு நாளை தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து தகவல்கள் தெரியவந்துள்ளது.