பெட்டி கடையில் நான்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த கடையின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சில இடங்களில் மறைமுகமாக விற்பனை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் வழக்கமான விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனையடுத்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் திருச்சி, சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து பிற ஊர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது என காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பேரில் திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது சுபாஷ் என்பவருடைய பெட்டிகடையில் சோதனை போது சுமார் நான்கு மூட்டைகளில் 12000 புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சுபாஷை கைது செய்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் 120000 இருக்கும் என கூறப்படுகிறது.