பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 20 பாக்கெட் புகையிலையையும் பறிமுதல் செய்து விட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி இந்திரா காலனி பகுதியில் சாத்தூர் தாலுகா காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் வேலுச்சாமி என்பவர் தனது கடையில் புகையிலைப் பொருட்களை வாங்கி வைத்து விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து வேலுச்சாமியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 20 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.