சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிகரலபள்ளி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சூலகிரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிகரலபள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த கடையில் சோதனை செய்த காவல்துறையினர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக சதன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.