Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அவன் தான் இதை பண்ணுனான்…. வசமாக சிக்கிய வெளிமாநில வாலிபர்…. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வெளிமாநில வாலிபரை கைது செய்த காவல்துறையினர், 72 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள போயம்பாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அனுப்பர்பாளையம் காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த வீட்டு உரிமையாளர் பொன்னுசாமியிடம் நடத்திய விசாரணையில் போயம்பாளையம் நாலு ரோடு சந்திப்பு அருகில் உள்ள சங்கர் மார்க்கெட்டிங் என்ற கடையை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லீலாராம் என்ற வெளிமாநில வாலிபர் வீட்டை வாடகைக்கு எடுத்து புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. அதன் பின் லீலாராமை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 72 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அனுப்பர்பாளையம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |