புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள வாரியங்காவல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் இளையராஜா மற்றும் கணேசன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் அப் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.