சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் டீக்கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து காவல்துறையினர் கடையில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் டீ கடை உரிமையாளரான ராஜ்குமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.