சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் பஜார் பகுதியில் சட்ட விரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது மகாலிங்கம் என்பவர் தனது கடையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகாலிங்கத்தை கைது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.