புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் பெட்டி கடையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததை பார்த்துள்ளனர்.
இதனை அடுத்து சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அந்த கடையின் உரிமையாளரான பாபு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெட்டி கடையில் இருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.