சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேடபட்டி, நாகலாபுரம், சந்தைப்பேட்டை போன்ற பகுதிகளில் சங்கரலிங்கபுரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் சாமி, விஜயராஜ், ராமச்சந்திரன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 456 புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.