Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடங்கியது ஐபில் போட்டி … ஆர்சிபி அணியின் கேப்டன்…விராட் கோலி பவுலிங் தேர்வு…!!!

2021 ம் ஆண்டிற்கான ஐபில் தொடரின், முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், மும்பை இந்தியன்ஸ் –   ஆர்சிபி அணிகளுக்கிடையேயான போட்டி தொடங்கியது.

கடந்த ஆண்டு கொரோனா  தொற்றின்  காரணமாக, ஐபிஎல் போட்டிகள்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றானது வேகம் எடுக்க தொடங்கியுள்ளது .இந்த இக்கட்டான சூழலிலும், தற்போது 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது.

14 வது ஐபிஎல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 .30 மணிக்கு தொடங்கி உள்ளது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டிக்காக  டாஸ் போடப்பட்டதில் ,ஆர்சிபி அணியின் கேப்டன்விராட் கோலி  டாஸ் வென்று ,பவுலிங்கை தேர்வு செய்தார். முதல்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியில் கிறிஸ் லின், மார்கோ ஜான்சென்  அறிமுகமாகியுள்ளன.
.

 

Categories

Tech |