Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தொடர் கனமழையால்…. நிரம்பி வழியும் தடுப்பணை…. விவசாயிகள் மகிழ்ச்சி ….!!!

கனமழை காரணமாக தடுப்பணையில் நிரம்பி நீர் வழிந்தோடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் .

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழை காரணமாக நேற்று ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் நாகநதியில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாபாளையம் கிராமத்தில் தடுப்பணை நிரம்பி நீர் வழிகின்றது .

இதையடுத்து கண்ணமங்கலம் ஏரிக்கு வரும் மேல்வல்லம் தடுப்பணையில் நீர் தேங்கி ஏரிகால்வாய் மூலம் லேசான நீர் வரத்து ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல கொளத்தூர் மற்றும்  மேல்நகர் ஏரிகால்வாய்களிலும் நீர்வரத்து  ஏற்பட்டுள்ளது என்று  பொதுப்பணித்துறை பாசன ஆய்வாளரான முருகன் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |