Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடரை ரத்து செய்த நியூசிலாந்து அணி ….. தனி விமானம் மூலம் துபாய் சென்றனர் ….!!!

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி வீரர்கள் தனி விமானம் மூலமாக துபாய் வந்தடைந்தனர் .

கடந்த 18ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட  நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் விளையாடி இருந்தது. அதன்படி இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 17-ம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற இருந்தது. ஆனால் போட்டி தொடங்க சில மணி நிமிடங்களுக்கு முன்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதனால் நியூசிலாந்தின் இந்த செயல்  குறித்து விசாரணை நடத்த ஐசிசி -யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  புகார் அளித்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து அணி வீரர்கள் தனி விமானம் மூலமாக துபாய் வந்தடைந்தனர். இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |