மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசோடு பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. இதையடுத்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை திரும்ப மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு உலக அளவில் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தபடும் என்று விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது .அதனால் இன்று பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த ரயில் மறியல் போராட்ட அறிவிப்பு காரணமாக ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.