தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,941பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,170 பேர் ஆண்கள், 804 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 45 அரசு மற்றும் 34 தனியார் மையங்கள் என மொத்தம் 79 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை – 1,415, செங்கல்பட்டு – 178, திருவள்ளூர் – 81, திருவண்ணாமலை – 35 பேர், காஞ்சிபுரம் – 32, ராமநாதபுரம் – 23, நெல்லை – 21, விழுப்புரம் – 16, மதுரை – 16, தென்காசி – 16, சிவகங்கை – 15, கள்ளக்குறிச்சி – 14 பேரும் திண்டுக்கல் – 11, சேலம் – 10, திருச்சி – 9 , வேலூர் – 9, தேனி -8, திருவாரூர் – 8, நாகை – 7, விருதுநகர் – 7, ராணிப்பேட்டை – 6, கோவை – 3, தஞ்சை – 4, திருப்பத்தூர் – 2, கன்னியாகுமரி – 2, தருமபுரி, கரூர், ஈரோடு, பெரம்பலூர், திருப்பூரில் தலா ஒருவரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.