தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,933 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை – 1,479, அரியலூர் – 4, செங்கல்பட்டு – 128, கோவை – 5, கடலூர் – 4, தருமபுரி – 3, திண்டுக்கல் – 2, கள்ளக்குறிச்சி – 13, காஞ்சிபுரம் – 26, மதுரை – 31, நாகை – 8, நாமக்கல் – 2, புதுக்கோட்டை – 6, பெரம்பலூர் – 1, ராமநாதபுரம் – 5, ராணிப்பேட்டை – 4, சிவகங்கை – 12, தென்காசி – 4, தஞ்சை – 5 தேனி – 3, திருவள்ளூர் – 92, திருவண்ணாமலை – 22 பேர், திருவாரூர் – 6, தூத்துக்குடி – 18, நெல்லை – 15, திருச்சி – 7 ,
விழுப்புரம் – 16, விருதுநகர் – 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 18,231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 6,73,906 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் 45 அரசு மற்றும் 33 தனியார் மையங்கள் என மொத்தம் 78 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.