Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (25.07.2020) மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு..!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் இதுவரை இல்லாத உச்சமாக 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இதுவரை இல்லாத அளவாக இன்று 7,758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,51,055 ஆக அதிகரித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. இன்று மட்டும் 61,729 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 22,00,433 ஆக இருக்கின்றது.

அதேபோல இன்று ஒரே நாளில்  89 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 52,273 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று ஒரு மாவட்டமும் தப்பவில்லை.. கொரோனா தொற்று 37 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது. இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருப்பது மகிழ்ச்சிஅளிக்கும் விதமாக இருக்கிறது..

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :

சென்னை -1329
செங்கல்பட்டு -449
காஞ்சிபுரம் -442
விருதுநகர் -376
திருவள்ளூர் -385
தூத்துக்குடி – 317
மதுரை – 301
கோவை – 270
குமரி -269
தேனி – 235
ராணிப்பேட்டை – 244
வேலூர் -212
நெல்லை-212
திருச்சி – 199
தஞ்சை-162
விழுப்புரம் -157

Categories

Tech |