தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள்.
இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியானது.. அதில், இன்று தமிழகத்தில் இதுவரை 102 பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் 53 அரசு, 52 தனியார் ஆகும். இன்று மட்டும் 42,531 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 16,09,448 ஆக இருக்கின்றது. இன்று புதிதாக 4,244 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,34,226 ல் இருந்து 1,38,470 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை கொரோனா பாதித்த 89,532 பேர் மீண்டுள்ளனர். இதனால் தொற்று அடைந்தவர்களில் இதுவரை 64.66 % பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை 1,966-ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 46,969 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.