Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 17,728ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 510பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் – 25, செங்கல்பட்டு – 23, திருவண்ணாமலை -14 , காஞ்சிபுரம் – 13, தூத்துக்குடி – 10, சேலம் – 9, கடலூர் – 8, கள்ளக்குறிச்சி – 8, கன்னியாகுமரி – 4, வேலூர் – 3, தருமபுரி – 2, கிருஷ்ணகிரி – 2, மதுரையில் – 2 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருப்பத்தூர், விருதுநகரில் தலா இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த 54 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டியத்தில் வந்த 5 பேர், குஜராத்தில் இருந்து வந்த 6 பேர், கேரளத்தில் இருந்து வந்த ஒருவர் , துபாய் – 5 பேர், உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த 2 பேர், டெல்லி – 2 பேர், தெலுங்கான – 3 பேர் என மொத்தம் 54 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |