Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 21,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 82 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 856 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குவைத்தில் இருந்து வந்த 3 பேர், சத்தீஸ்கரில் இருந்து வந்த ஒருவர், டெல்லி – 2, குஜராத் – 6 , கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவருக்கும், ஜார்கண்ட் – 2, மஹராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 46 பேர், மேற்கு வங்கம் – 12,உபி – இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 599 பேர் ஆண்கள், 338 பேர் பெண்கள், ஒரு திருநங்கை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 616 இன்று புதிதாக பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,980ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |