இன்றைய பஞ்சாங்கம்
23-02-2020, மாசி 11, ஞாயிற்றுக்கிழமை,
அமாவாசை இரவு 09.02 வரை பின்பு வளர்பிறை பிரதமை.
அவிட்டம் நட்சத்திரம் பகல் 01.42 வரை பின்பு சதயம்.
மரணயோகம் பகல் 01.42 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
இன்றைய ராசிபலன்
மேஷம்
இன்று நீங்கள் நினைத்த அனைத்தும் நிறைவேறும். இல்லத்தில் குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேற்றுமை அகன்று ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு ஆனந்தத்தை கொடுக்கும். சகோதர சகோதரிகள் மூலம் நன்மை நடக்கும். பணியில் இருப்பவர்களுக்கு நன்மை கொடுக்கும் மாற்றங்கள் ஏற்படும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடந்தேறும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். பணவரவு இன்று அதிக அளவிலேயே இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். தொழில் தொடர்பாக பெரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
மிதுனம்
இன்று செய்யும் அனைத்து செயலிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தினருடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் இன்று உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப்பெறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். கடன் பிரச்சினை அகலும்.
கடகம்
இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலைப்பதால் வீண் டென்ஷன், உடல்நிலை பாதிப்பு போன்றவை ஏற்படக்கூடும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைய வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் அனைத்திலும் அலைச்சலுக்கு பிறகு நல்ல பலன் கிடைக்கும். இன்று எதிலும் கவனமுடன் இருப்பது நன்மை கொடுக்கும்.
சிம்மம்
இன்று உங்கள் திறமை மூலம் வளர்ச்சி பெறும் வாய்ப்புகள் இருக்கும். குடும்பத்தில் ஆனந்தமான சூழல் நிலவும். பெண்கள் புதிதாய் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் இன்று நல்ல பலனைக் கொடுக்கும். இன்று தர்ம காரியங்களைச் செய்வதன் மூலம் மன நிம்மதி அடைவீர்கள்.
கன்னி
இன்று காலையிலேயே வீடுதேடி மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். உறவினர்களின் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடந்தேறும். இன்று உங்களுக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் இருக்கும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் சாதகமான பலனே இருக்கும். இதுவரை இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் இன்று எளிதில் முடிவடையும்.
துலாம்
இன்று இல்லத்தில் பொருளாதார நெருக்கடிகள் இருக்கும். வாகனத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்ய ஒரு தொகையைச் செலவிட கூடும். பிள்ளைகளினால் மனவருத்தங்கள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். வியாபாரத்தில் எதிர்பார்க்காத அளவில் முன்னேற்றம் காணப்படும். பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறைவாகவே இருக்கும்.
விருச்சிகம்
இன்று இல்லத்தில் உறவினர்களின் வருகையினால் ஆனந்தம் பொங்கும். பெரியவர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் அகலும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரம் தொடர்பாக புதிய திட்டங்களை நிறைவேற்ற பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும்.
தனுசு
இன்று இல்லத்தில் பொருளாதார நிலை சிறந்த அளவில் இருக்கும். பிள்ளைகள் உதவி கரம் நீட்டுவார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு அதிகச் செலவுகள் இருக்கும். வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். புதிதாய் சொத்து வாங்க அக்கறை அதிகம் காட்டுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.
மகரம்
இன்று உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு சிறு தொகையை செலவிட கூடும். பிள்ளைகள் மூலம் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலில் லாபம் ஓரளவே இருக்கும். எந்த செயலையும் தொடங்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நன்மை கொடுக்கும். எதிர்பார்த்திருந்த உதவிகள் இன்று கிடைக்கப்பெறும்.
கும்பம்
இன்று உடல் நலத்தில் இருந்த பாதிப்புகள் விலகி அனைத்து செயல்களிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் அதிகரிக்கும். பணவரவு சிறந்த அளவில் காணப்படும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். நடக்காது என நினைத்த ஒரு காரியம் இன்று எளிதில் நடைபெறும்.
மீனம்
இன்று இல்லத்தில் அமைதியற்ற சூழல் நிலவும். உடல் நலம் தொடர்பாக எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் மூலம் நன்மை நடக்கும். பங்குதாரர்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் சாதகமாகவே செயல்படுவார்கள். இன்று கடன் பாக்கிகள் அனைத்தும் வசூலாகும்.