Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் டெல்லியில் ஸ்புட்னிக் வி… கிடைக்கும் மருத்துவமனைகள்…!!!

இன்று முதல் டெல்லி மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் ஸ்புட்னிக் வீர் மருந்து கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல மாநிலங்களில் தொற்று குறைந்து கொண்டு வருவதால் சில தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றன. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

அதன்படி டெல்லியில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் வி இன்றுமுதல் போடப்படுகின்றது. டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் இது வழங்கப்படுகிறது. ஒரு தடுப்பூசியின் விலை ரூபாய் 1,145 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வார இறுதியில் மதுக்கர் ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையிலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |