Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் நடைமுறைக்கு வரும் “ஃபாஸ்ட்டேக்”… அப்ப எதுக்கு கால அவகாசம்… நீங்களே பாருங்கள்..!!

ஜனவரி 1 முதல் எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பின்னர் எதற்கு கால அவகாசம் என்பதை பார்ப்போம்.

ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஜனவரி 1, 2021 முதல், அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக்குகள் கட்டாயமாக இருக்கும் என்று தெளிவுபடுத்தியது.

இதில் சுங்கச்சாவடிகளில் செயல்படும் ஒரு கலப்பின பாதைகளில், பணம் செலுத்தும் நடைமுறையில் மட்டும் பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.மேலும் மத்திய மோட்டார் வாகன விதி நடைமுறையில் உள்ளது என்பதை மத்திய அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருந்தாலும், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளில் கலப்பின பாதைகளில், கட்டணம் செலுத்துதல் ஃபாஸ்டேக் மூலமாகவும், பிப்ரவரி 15, 2021 வரை படம் மூலமாகவும் செய்யப்படலாம். மேலும், ஃபாஸ்டாக் பாதைகளில், கட்டணம் செலுத்துதல் ஃபாஸ்டாக் வழியாக மட்டுமே தொடரும்.

2016ஆம் ஆண்டு ஃபாஸ்ட்டேக் அறிமுகம் செய்தது. அப்போது நான்கு வங்கிகளில் மொத்தமாக ஒரு லட்சம் ஃபாஸ்ட்டேக் விநியோகித்தனர். 2017ஆம் ஆண்டில் எண்ணிக்கை 7 லட்சமாக உயர்ந்தது. 2018ல் 38 இலட்சமாக உயர்ந்தது. இந்நிலையில் ஜனவரி 1 முதல் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறை இந்த ஃபாஸ்ட்டேக். மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989கீழ், 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் பதிவு செய்யப்படும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் இந்த ஃபாஸ்ட்டேக் கட்டாயமாகும். அதேபோல fc வாங்கும் போது ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டது.

Categories

Tech |