Categories
மாநில செய்திகள்

“இன்று முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்”…? தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமா..

சென்னையில் இன்று முதல் தண்ணீர் லாரிகள் இயங்காது என்று மெட்ரோ தண்ணீர் டேங்கர் லாரி ஒப்பந்தகாரர் சங்கம் தெரிவித்துள்ளது.

தண்ணீர் லாரி ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்தம் சென்ற ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. புதிய வாடகையில் ஒப்பந்தம் இட கோரி ஒப்பந்தக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றன.  சென்னை மாநகர குடிநீர் வாரியம் இதற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்காத காரணத்தினால் அனைத்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 650 ஒப்பந்த லாரிகள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |