Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 12.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

12-02-2020, தை 29, புதன்கிழமை,

சதுர்த்தி இரவு 11.39 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.

உத்திரம் நட்சத்திரம் பகல் 11.46 வரை பின்பு அஸ்தம்.

அமிர்தயோகம் பகல் 11.46 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 2. ஜீவன் – 1.

சங்கடஹர சதுர்த்தி.

விநாயகர் வழிபாடு நல்லது.

சுபமுகூர்த்த நாள்.

சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

மேஷம்

இன்று மகிழ்ச்சி கொடுக்கும் செய்தி வீடு தேடி வரும். உறவினர்களின் வருகையால் ஆனந்தம் பொங்கும். பூர்வீக சொத்துகளால் நல்ல பலன் கிடைக்கும். பணி தொடர்பாக வெளிவட்டார நட்பு விரிவடையும். தொழிலில் உங்கள் பெயர் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்கள் இன்று உதவியாக இருப்பார்கள்.

ரிஷபம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பின்மையும் சோர்வும் காணப்படும். உறவினர்களின் வருகையினால் தேவையற்ற செலவுகள் இருக்கும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தாமதம் ஏற்படும். நன்றாக சிந்தித்து செயல் படுவதால் வியாபாரத்தில் முன்னேற்றத்தை பார்க்க முடியும்.

மிதுனம்

இன்று பணியில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். தொழில் தொடர்பான கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருக்கவும். பெரியவர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புஎடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் கிடைக்கும். சேமிப்பு இன்று குறையும்.

கடகம்

இன்று இல்லத்தில் அமைதியான சூழல் நிலவும். வயதில் மூத்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகலும். வியாபார வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியைக் கொடுக்கும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் இருந்த தடைகள் அகன்று முன்னேற்றம் காணப்படும். பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.

சிம்மம் 

இன்று காரியங்களில் வெற்றி பெற கூடுதலான முயற்சி தேவைப்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. தெய்வீகம் தொடர்பான காரியங்களை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால் லாபம் அதிகரிக்கும். பெரியவர்களின் சந்திப்பால் நன்மை நடக்கும்.

கன்னி

இன்று இல்லத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும். வியாபார வளர்ச்சிக்காக அதிநவீன கருவிகளை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். வெளியிலிருந்து கைக்கு வரவேண்டிய தொகை இன்று சரியாக வந்து சேரும். பணியில் சக பணியாளர்கள் ஒற்றுமையுடன் இருப்பார்கள்.

துலாம்

இன்று பணவரவு போதுமானதாகும். வாகனங்களினால் செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்து மூலம் மன அழுத்தம் அலைச்சல் ஏற்படலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். நண்பர்களால் நன்மை நடக்கும். பணியில் அனைவரையும் அமைதியாக அனுசரித்து செல்வது சிறப்பு.

விருச்சிகம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கப்பெறும். பணம் தொடர்பான பிரச்சனை அகலும். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். புதிதாய் வாகனம் வாங்கி ஆனந்தம் கொள்வீர்கள். இன்று சுப காரியங்கள் கைகூடிவரும்.

தனுசு

இன்று  அனைத்து செயல்களையும் மிகவும் சிறப்பாக செய்வீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்து இருந்த சலுகை கிடைக்கப் பெறும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். பிள்ளைகளினால் பெருமை அதிகரிக்கும். தொழில் தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி வரும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும்.

மகரம்

இன்று வெளியூர் செல்வதால் அலைச்சல் உருவாகும். திடீர் செலவுகளை சமாளிக்க கடன் பெற வேண்டிய நிலை இருக்கும். மனதில் மிகவும் உறுதியோடு பிரச்சனைகளை எதிர்நோக்குவீர்கள். தொழிலில் மாற்றங்கள் செய்வதால் லாபம் அதிகரிக்கும்.

கும்பம்

இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலைப்பதால் செய்யும் செயல்களில் தாமதம் இருக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும். இன்று புதிதாய் முயற்சிகள் எதையும் செய்யாமல் தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தோலை தூர பயணம் மேற்கொள்ளும் பொழுது கவனமாக இருக்கவும்.

மீனம்

இன்று இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பணவரவு அதிக அளவில் இருப்பதினால் வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பில்  ஈடுபடுவார்கள். பங்குதாரர்களுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர் சிலருக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கப் பெறும்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |