இன்றைய தினம் : 2020 ஜனவரி 31
கிரிகோரியன் ஆண்டு : 31_ ஆம் நாளாகும்.
நெட்டாண்டு : 335_ஆம் நாள்
ஆண்டு முடிவிற்கு : 334_ நாள்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
314 – மில்த்தியாதேசுக்குப் பின்னர் முதலாம் சில்வெஸ்தர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1208 – லேனா என்ற இடத்தில் சுவீடன் மன்னர் இரண்டாம் சிவெர்க்கருக்கும் இளவரசர் எரிக்குக்கும் இடையே இடம்பெற்ற போரில், எரிக் வென்றதை அடுத்து, அவன் இரண்டாம் எரிக் என்ற பெயரில் மன்னராக முடிசூடினான்.
1606 – வெடிமருந்து சதித்திட்டம்: இங்கிலாந்து மன்னர் முதலாம் யேம்சிற்கு எதிராகவும் நாடாளுமன்றத்திற்கெதிராகவும் சதி முயற்சியில் இறங்கியமைக்காக கை பாக்சு என்பவன் தூக்கிலிடப்பட்டான்.
1747 – பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது.
1862 – ஆல்வன் கிரகாம் கிளார்க் சிரியசு பி என்ற வெண் குறுமீன் விண்மீனை 18.5 செமீ தொலைநோக்கி ஊடாகக் கண்டுபிடித்தார்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க சட்டமன்றம் அடிமை முறையை ஒழிக்கும் 13-வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியது.
1876 – அனைத்து இந்தியப் பழங்குடிகளும் அவர்களுக்கென அமைக்கப்பட்ட சிறப்பு இடங்களுக்கு செல்லுமாறு ஐக்கிய அமெரிக்க அரசு உத்தரவிட்டது.
1915 – முதலாம் உலகப் போர்; செருமனி உருசியாவுக்கு எதிராக முதற்தடவையாக நச்சு வாயுவை பொலிமோவ் சமரில் பயன்படுத்தியது.
1918 – இரண்டு பிரித்தானிய அரச கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து போர்க்கப்பல்கள் சேதமடைந்தன.
1928 – லியோன் திரொட்ஸ்கியை சோவியத் ஒன்றியம் நாடு கடத்தியது.
1937 – சோவியத் ஒன்றியத்தில் த்ரொட்ஸ்கி ஆதரவளர்கள் 31 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: மலேயா சமரில் கூட்டுப் படையினர் சப்பானியரிடம் தோற்றதை அடுத்து சிங்கப்பூருக்குப் பின்வாங்கினர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் சப்பான் வசமிருந்த மார்சல் தீவுகளில் தரையிறங்கின.
1945 – அமெரிக்க இராணுவ வீரன் எடி சிலோவிக் என்பவன் இராணுவத்தில் இருந்து வெளியேறியமைக்காகத் தூக்கிலிடப்பட்டான்.
1945 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் இசுடூதொஃப் வதை முகாமிலிருந்த 3,000 கைதிகள் நாட்சிகளினால் பால்ட்டிக் கடலினூடாக கட்டாயமாக நடத்திக் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1946 – பனிப்போர்: யுகோசுலாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டு நாட்டில் பொசுனியா எர்செகோவினா, குரோவாசியா, மாக்கடோனியா, மொண்டெனேகுரோ, செர்பியா, சுலோவீனியா என ஆறு குடியரசுகள் நிறுவப்பட்டன.
1950 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் ஐதரசன் குண்டு தயாரிப்பதற்கான திட்டத்தை அறிவித்தார்.
1953 – வடகடல் பெருக்கெடுத்தன் விளைவாக நெதர்லாந்தில் 1,800 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் 300 பேரும் உயிரிழந்தனர்.
1957 – லாஸ் ஏஞ்சலசில் இரண்டு வானூர்திகள் மோதியதில் 8 பேர் வானிலும், இருவர் தரையிலும் உயிரிழந்தனர்.
1958 – விண்வெளிப் போட்டி: அமெரிக்காவின் முதலாவது வெற்றிகரமான செயற்கைக் கோள் எக்ஸ்புளோரர் 1 வான் ஆலன் கதிர்வீச்சுப்பட்டையைக் கண்டறிந்தது.
1961 – நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
1966 – சோவியத் ஒன்றியம் தனது லூனா திட்டத்தின் கீழ் லூனா 9 என்ற விண்கலத்தை ஏவியது.
1968 – வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் ஓசிமின் நகரில் அமெரிக்க தூதரகத்தைத் தாக்கினர்.
1968 – நவூரு ஆத்திரேலியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1971 – அப்பல்லோ 14: விண்வெளி வீரர்கள் அலன் ஷெப்பர்ட், இசுடுவர்ட் ரூசா, எட்கார் மிட்செல், ஆகியோர் சாடர்ன் V ஏவுகலத்தில் நிலாவை நோக்கி சென்றனர்.
1980 – குவாத்தமாலாவில் எசுப்பானிய தூதரக முற்றுகையில் 39 பேர் உயிருடன் தீயிட்டுக் கொல்லப்பட்டனர்.
1990 – சோவியத் ஒன்றியத்தில் முதலாவது மெக்டொனால்ட்சு உணவகம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது.
1996 – கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டு 1,400 பேர் வரை படுகாயமடைந்தனர்.
2000 – கலிபோர்னியாவில் எம்டி-83 விமானம் ஒன்று பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயனம் செய்த அனைத்து 88 பேரும் உயிரிழந்தனர்.
2003 – ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வோட்டர்ஃபோல் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் சாரதி உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
2009 – கென்யாவில் எண்ணெய்க் கசிவை அடுத்து தீப்பற்றியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
2018 – நீல நிலவு மற்றும் முழு நிலவு மறைப்பு இடம்பெற்றன.
பிறப்புகள்
1762 – லக்லான் மக்குவாரி, காலனித்துவ நிர்வாகி (இ. 1824)
1797 – பிராண்ஸ் சூபேர்ட், ஆத்திரிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1828)
1906 – இ. மு. வி. நாகநாதன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1971)
1912 – க. நா. சுப்ரமண்யம், தமிழக எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் (இ. 1988)
1929 – ரூடால்ஃப் மாஸ்பவர், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 2011)
1932 – செ. எ. ஆனந்தராஜன், இலங்கைத் தமிழ்க் கல்வியாளர், ஆசிரியர் (இ. 1985)
1932 – மசூர் மௌலானா, இலங்கை முசுலிம் அரசியல்வாதி (இ. 2015)
1937 – திருவிழா ஜெயசங்கர், தமிழக நாதசுவரக் கலைஞர்
1938 – பீட்ரிக்ஸ் (நெதர்லாந்து), நெதர்லாந்து அரசி
1944 – நீலன் திருச்செல்வம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1999)
1975 – பிரீத்தி சிந்தா, இந்திய நடிகை, தயாரிப்பாளர்
1981 – ஜஸ்டின் டிம்பர்லேக், அமெரிக்கப் பாடகர், நடிகர்
1992 – ஏமி ஜாக்சன், ஆங்கிலேய-தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
1561 – பைராம் கான், முகலாயத் தளபதி (பி. 1501)
1606 – கை பாக்சு, ஆங்கிலேயக் குற்றவாளி, வெடிமருந்து சதித்திட்டத்தின் தலைவர் (b. 1570)
1888 – ஜான் போஸ்கோ, சலேசிய சபையை நிறுவிய இத்தாலிய மதகுரு (பி. 1815)
1933 – ஜோன் கால்ஸ்வர்தி, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1867)
1950 – டைகர் வரதாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1976)
1954 – எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங், எஃப்.எம். வானொலியைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1890)
1969 – மெகர் பாபா, இந்திய ஆன்மிகவாதி (பி. 1894)
1988 – அகிலன், தமிழக எழுத்தாளர், நாடகாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர் (பி. 1922)
1995 – கா. ம. வேங்கடராமையா, தமிழகக் கல்வெட்டறிஞர், தமிழறிஞர் (பி. 1912)
2009 – நாகேஷ், நகைச்சுவை நடிகர் (பி. 1933)
சிறப்பு நாள்
விடுதலை நாள் (நவூரு, ஆத்திரேலியாவிடம் இருந்து 1968)
தெருக் குழந்தைகள் நாள் (ஆஸ்திரியா)