ராஜஸ்தானில் இன்று புதிதாக 86 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33,050ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,718 பேர் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,074 ஆக அதிகரித்துள்ளது. 8,325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
மேலும் 23,651 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜார் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 9 பேர் காய்கறி விற்பனையாளர்கள் மற்றும் ஒருவர் மருத்துவமனையில் செவிலியராக இருந்தவர் என தகவல் அளித்துள்ளனர். காய்கறி விற்பனையாளர்கள் 9 பேரும் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில் இன்று புதிதாக 86 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த எண்ணிக்கை 2,524ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 57 பேர் இதுவரை உயிரிழந்த நிலையில், 827 நோயாளிகள் இன்று வரை மீண்டுள்ளனர். புனே மாவட்டத்தில் கடந்த 12 மணி நேரத்தில் புதிதாக 127 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் புனே மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை 1,722 ஆக அதிகரித்துள்ளது.