Categories
மாநில செய்திகள்

“இன்று 2வது நாள் முதல்வர் ஆலோசனை” 3 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கவில்லை..!!

வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக தமிழக முதல்வர் தலைமையில் இன்று 2வது நாளாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தில் கலெக்டர்கள் மாநாடு நடைபெறவில்லை. இதையடுத்து தலைமைச் செயலகத்தில் இரண்டு நாட்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என்று ஏற்கனவே சுற்றைக்கை அனுப்பபட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் நாளில் கன்னியாகுமரி , நெல்லை , தூத்துக்குடி , விருதுநகர் , மதுரை , தேனி , சிவகங்கை , என தென்மாவட்டங்கள் மற்றும் பெரம்பலூர் , தஞ்சாவூர் , நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டம் என 16 மாவட்ட ஆட்சியருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

Image result for முதல்வர் தலைமையில் கலெக்டர்கள்

இதில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக , பொதுப்பணித்துறை கால்நடை உணவு வருவாய் வளர்ச்சி திட்டம் தொடர்பாக கேட்டறிந்தார். மேலும் சட்டப்பேரவையில் 110 விதிகளின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் , துணை முதலமைச்சர் , மூத்த அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி வருவாய் துறை அமைச்சர் RB உதயகுமார், ஜெயக்குமார் அரசு துறைகளின்  செயலாளர்கள்  பங்கேற்றனர்.

Image

இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று 2-வது நாளாக 16 மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால் 13 மாவட்ட ஆட்சியர்களுடன்  மட்டுமே ஆலோசனை நடத்திவருகிறார். தேர்தல் காரணமாக வேலூர் மாவட்ட ஆட்சியர் மட்டும் முதல்வருடனான ஆலோசனையில் பங்கேற்கவில்லை. மேலும் கனமழை காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்கவில்லை.

Categories

Tech |