பொங்கல் பரிசு வாங்க சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று இன்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார். ஏற்கனவே பொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த பொங்கல் பரிசை வாங்க முடியும்.
கொரோனா, புயல் என வரிசையாக மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசை உயர்த்தி ரூ.2500 ஆக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக www.tnpds.gov.in என்ற இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது.