Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று ஒரே நாளில்…! ”அடுத்தடுத்து ஷாக்” நடுங்கி போன தமிழகம் …!!

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஷாக் கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது.  இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 964 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 15,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்ததால் மொத்த பலியானோர் எண்ணிக்கை 184-ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 10,964 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டதால் இதுவரை 4,80,246 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று  மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 50 பேருக்கு இன்று கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் பாதிப்பு 2ஆவது நாளாக ஆயிரத்தை கடந்ததை போல தொடர்ந்து இரண்டு நாட்களாக உயிரிழப்பு இரட்டை எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.

அடுத்தடுத்து இரண்டு நாட்களில் பதிவான உயிரிழப்பு, கொரோனா பாதிப்பு இரண்டும் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில் கொரோனா இல்லாமல் இருந்த 2 மாவட்டங்களின் கனவையும் இன்றைய நாள் பாதிப்பு தகர்ந்துள்ளது. இன்று மட்டும் நீலகிரி மற்றும் கோவையில் கொரோனா இரண்டாவது ரவுண்டு அடித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 145 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 144 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் ஒருவர் உயிரிழந்ததால் கொரோனா மாவட்டமாக இருந்த கோவையில் இன்று 5 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 15 பேரும் குணமடைந்து வீடு திரும்பி கொரோனா இல்லா மாவட்டமாக இருந்த நீலகிரியில் இன்று மீண்டும் ஒருவருக்கு நோய் தொற்று உறுதியுள்ளது.

Categories

Tech |